» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாற்றம்

வெள்ளி 30, ஜூலை 2021 10:10:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மாற்றப்பட்டு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிர்வாக நலன் கருதி, இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் ஜெகவீர பாண்டியன் அங்கிருந்து இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் வெ.சீனிவாசன் பணியிடத்தில் பணியமர்த்தம் செய்து ஆணையிடப்படுகிறது. 

ஜெகவீரபாண்டியன், இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணிப் பொறுப்பிலிருந்து 30.07.2021-அன்று பிற்பகல் விடுவிக்கப்படுகிறார். இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam



Black Forest Cakes






Thoothukudi Business Directory