» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச செல்போன் : கரூர் வைஸ்யா வங்கியின் சார்பில் வழங்கல்!

வெள்ளி 30, ஜூலை 2021 4:22:53 PM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியின் சார்பாக ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏபிசிவி கணபதி தலைமையில் தூத்துக்குடி கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் நவநீத கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,ஆன்லைனில் கல்வி கற்பதற்காக மாணவ, மாணவியர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்களை இலவசமாக வழங்கினார். தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர்கள் சீனிவாசன், முத்துக்குமார், பள்ளி முன்னாள் மாணவர் வேல் ராமலிங்கம், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர். முதுகலை ஆசிரியை சங்கரி ரேவதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியை மரகதவள்ளி நன்றியுரை ஆற்றினார். 


மக்கள் கருத்து

R.PraveenJul 30, 2021 - 04:43:30 PM | Posted IP 162.1*****

நான் தூத்துக்குடி மாவட்டம் பாரதியார் வித்யாலயம் பள்ளி முன்னாள் மாணவன் (2018) இவர்களின் இந்த உதவி வரவேற்கத்தக்கது... மேலும் மாணவர்கள் குறைவாக இருந்தாலும் இடைவிடாத உழைப்பினால் தொடர்ந்து பள்ளியை இயக்கி செல்லும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்..... 🙏🙏🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory