» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மசாஜ் சென்டரில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியர் கைது

வியாழன் 29, ஜூலை 2021 9:32:59 PM (IST)

தூத்துக்குடியில் மசாஜ் சென்டரில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி  கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான தலைமைக் காவலர் மலர்கொடி மற்றும் காவலர் கலைச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருச்சி மாவட்டம் பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மகன் தினேஷ்குமார் (24) என்பவர் திருச்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த பெண்களுக்கு ஆயுர்வேத மசாஜ் களீனிக் சென்டரில் வேலை வாங்கி தருவதாகவும், பணம் தருவதாகவும் கட்டாயபடுத்தி தூத்துக்குடி, டூவிபுரம் பகுதியில்; ஒரு வீட்டின் மேல்தளத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் தினேஷ்குமாரை கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேரையும் மீட்டு பாதுகாப்பாக தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். 

இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி எதிரியை கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்ட தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory