» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் - பாளையங்கோட்டை விரைவு சாலை அமைக்கும் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வியாழன் 29, ஜூலை 2021 9:26:43 PM (IST)



சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில் திருச்செந்தூர் - பாளையங்கோட்டை விரைவு சாலை அமைக்கும் பணிகளையும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி மற்றும் புன்னக்காயல் பகுதியில் தாமிரபரணி குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளையும், சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில் திருச்செந்தூர் - பாளையங்கோட்டை விரைவு சாலை அமைக்கும் பணிகளையும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  நேரில் சென்று பார்வையிட்டு இன்று (29.09.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆழ்வார்திருநகரி பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் 25 கோடி மதிப்பிட்டில் தடுப்பணை கட்டும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  பார்வையிட்டார். இப்பணிகளை விரைந்து முழு வீச்சில் செய்திட வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் முதல் பாளையங்கோட்டை வரை 50 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.285 கோடி மதிப்பிட்டில் நடைபாதையுடன் கூடிய விரைவு சாலைகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  நேரில் சென்று ஆய்வு செய்தார். பக்தர்கள் பாத யாத்திரையாக நடப்பதற்கு அமைக்கப்படும் பகுதி மெயின் சாலையில் சிறிது தள்ளி அமைக்க வேண்டும். பக்தர்கள் தங்கும் இடங்களில் கழிப்பறை வசதிகளை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும், சாலை அமைக்கும் பணி மிக முக்கிய பணி எனவே இதை விரைந்து சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கும், ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்து புன்னக்காயல் பகுதியில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் முகத்துவர பகுதியில் ரூ.45.50 கோடி மதிப்பிட்டில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பின் மூலம் 3 இடங்களில் தடுப்பணை கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட நிலையில் நடைபெற்று வரும் பணிகளை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ்,  பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பணை கட்டும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர்கள் அண்ணாத்துரை, பத்மா, வட்டாட்சியர் இசக்கிராஜ், சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட கோட்ட பொறியாளர் கீதா, உதவி கோட்ட பொறியாளர் நிர்மலா, ஒப்பந்த நிறுவன மேலாண்மை இயக்குநர் ராகுல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

இயற்கை ரசிகன்Jul 30, 2021 - 08:35:19 AM | Posted IP 162.1*****

மரங்களை வெட்டாமல் ரோடு போடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory