» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திங்கள் 26, ஜூலை 2021 9:00:35 AM (IST)தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26இல் தொடங்கி ஆக.5ஆம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில் 439-வது ஆண்டு திருவிழா இன்று (ஜூலை 26) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடியேற்றும் நிகழ்ச்சியையொட்டி, ஆலயத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஜெபமாலை, 4.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 

பகல் 12 மணிக்கு மாதாவுக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி, ஆலய பங்குத் தந்தை குமாா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். திருவிழாவில் தினசரி காலை மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். பத்து நாட்களும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஆலயத்திற்குள் சென்று மாதாவை வணங்க அனுமதிக்கப்படுவார்கள். கரோனா ஊரடங்கு காரணமாக நற்கருணை பவனி, மாதா சொரூப சப்பர பவனி இந்தாண்டு நடைபெறாது. தினமும் திருப்பலிக்கு பின் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஒருவழிப் பாதையில் கோயிலுக்குள் வரிசையாக தரிசனம் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆராதனைகள் மற்றும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.திருவிழாவை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 2 துணை கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து

saranJul 26, 2021 - 09:05:53 PM | Posted IP 162.1*****

ave mariya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory