» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் - லோடு ஆட்டோ மோதல்: கல்குவாரி ஒப்பந்ததாரர் பலி - டிரைவர் கைது!!

வியாழன் 22, ஜூலை 2021 10:47:30 AM (IST)

கடம்பூர் அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதியதில் கல்குவாரி ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். லோடு வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள அயிரவன்பட்டி கிாமம்,கிழக்கு தெருவைச்  சேர்ந்தவர் சண்முகம் மகன் முருகேசன் (58), கல்குவாரி ஒப்பந்தம் எடுத்து தொழில் செய்து வந்தார். நேற்று தனது பைக்கில் ஐரவன்பட்டியிலிருந்து  கடம்பூர் நோக்கி சென்று காெண்டிருந்தார். 

ஐரவன்பட்டி விலக்கு ரோட்டில் பைக் திரும்பும் போது, எதிரே வந்த லோடு ஆட்டோ, பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப் பதிந்து, லோடு ஆட்டோவை ஓட்டிவந்த பரிவல்லிக் கோட்டையைச் சேர்ந்த சுரேந்திரன் மகன் சரவணன் (26) என்பவரை கைது செய்து  விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory