» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் உடல் மீட்பு

வியாழன் 22, ஜூலை 2021 8:45:49 AM (IST)

விளாத்திகுளம் அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.  

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தினை சேர்ந்த மீனவர் பிரான்சிஸ். இவர் நேற்று அதிகாலையில் அங்குள்ள மீனவர்களுடன் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் சென்றதும், நாட்டுபடகில் இருந்த தெர்மகோலினால் செய்யப்பட்ட சிறிய படகினை வைத்து கணவாய் மீன்பிடிக்க தொடங்கியுள்ளார். 

மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது தீடீரென காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீன்பிடித்து கொண்டு இருந்த பிரான்சிஸ் நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்த மீனவர்களும் பிரான்சிசை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் கடலின் அடிப்பகுதிக்கு சென்றுவிட்டதால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை சிறிது நேரத்தில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் அவரது உடலை தேடும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. 

இதையெடுத்து மீனவர்கள் வேம்பார் கடற்கரை போலீஸ் நிலையத்திற்கும், சூரங்குடி காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.  இதையெடுத்து போலீசார் முத்துக்குளிக்கும் மீனவர்களை வரவழைத்து பிரான்சிஸ் உடலை தேடும் பணியில் ஈடுபட வைத்தனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் அவரது உடலை கண்டுபிடித்து மீட்டனர். இதனை தொடர்ந்து அவரது உடலை பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேம்பார் கடற்கரை போலீசார் மற்றும் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory