» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை: ஆட்சியர் தகவல்

புதன் 21, ஜூலை 2021 9:33:24 PM (IST)

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 23ஆம் தேதி நடைபெறும் ஆடித்தபசு விழாவில் பொது மக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. மேற்படி நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் youtube மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில்ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23ம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மண்டகப்படி பூஜை நேரத்தின் பொழுது மட்டும் அன்றைய தினத்திற்குரியமண்டகப்படிதாரர்கள் அடையாள சீட்டுடன் அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் வசதிக்காக, ஜூலை 23ம் தேதி மேற்படி பூஜை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் youtube வாயிலாக நேரலையாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோயிலுக்கு வருகை புரிவதை தவிர்த்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

kumarJul 22, 2021 - 11:50:46 AM | Posted IP 108.1*****

ithu oru thalai patramana mudivu....arasu maruparisieelanai seythu bakthargalai koviluku anumathikkavendum....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory