» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆயர் இல்லத்தில் சபை மக்கள் முற்றுகை

புதன் 21, ஜூலை 2021 9:13:25 PM (IST)

தூத்துக்குடி ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு தங்கம்மாள்புரம் சபை மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் சேகரச் செயலா் உள்ளிட்ட திருமண்டல நிா்வாகிகள் தோ்தல் அடுத்தமாதம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி திருமண்டல வாக்குரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்கம்மாள்புரம் சேகரத்தில் பலரது போ்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சபை மக்கள் சுமார் 100பேர் தூத்துக்குடியில் உள்ளஆயர் இல்லத்தை திடீரென முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory