» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் காவல் துறைக்கு 100 பேரிகாடுகள் வழங்கல்

புதன் 21, ஜூலை 2021 8:06:19 PM (IST)தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணிக்கு 100 தடுப்பு வேலிகள் (Barricades) வழங்கப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் திருச்செந்தூர் கிளை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணிக்கு பயன்படும் வகையில் 100 இரும்பு தடுப்பு வேலிகளை (Barricades) திருச்செந்தூர் மெயின் ஆர்ச் முன்பு ஏஎஸ்பி ஹர்ஷ் சிங் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடி உதவி பொது மேலாளர் நவநீதகிருஷ்ணன்,  திருச்செந்தூர் கிளை மேலாளர் சிவசங்கரன் ஆகியோர்  வழங்கினர்.  

நிகழ்ச்சியில், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தி சீர் செய்வதற்கும் மற்றும் பாதுகாப்பு பணிக்கு பயன்படும் வகையிலும் 100 இரும்பு தடுப்பு வேலிகளை வழங்கிய தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்செந்தூர் கிளைக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எஸ்பி நன்றியை தெரிவித்தார். மேலும் கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தற்போது குறைந்துள்ளது. எனினும் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. 

அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இவை அனைத்தையும் நாம் கடைபிடித்து நாமே நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், கோவில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, குற்ற பிரிவு ஆய்வாளர் கனகபாய், போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

தூத்துக்குடிJul 22, 2021 - 10:27:42 AM | Posted IP 108.1*****

காற்று வேகமாக வீசுகிறது , சாலையில் மண்கள் சிதறி வருகிறது , வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்,.. அதுவும் சாலை பாதுகாப்பு தானே கொஞ்சம் கவனிங்க ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory