» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்களிடம் விளாத்திகுளம் எம்எல்ஏ குறைகேட்பு

புதன் 21, ஜூலை 2021 8:04:23 PM (IST)விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஜீ.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், முத்துக்குமரா புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர்  ஜீ.வி.மார்கண்டேயன் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் தங்களின் குறைகளான ஊர் சமுதாய நலக்கூடத்தை புதுப்பிக்கவும்,சீரான குடிநீர் வசதி வேண்டியும், முதியோர் உதவித்தொகை வேண்டியும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நிச்சயமாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
 
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் பேரூர்   செயலாளர் இரா.வேலுச்சாமி, வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், சென்றாயப் பெருமாள் மாவட்ட பிரதிநிதி தளவாய்ராஜன் ஒன்றிய கவுன்சிலர் ராஜ் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி,  ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாராமன், வேடநத்தம் கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முக ஆனந்த், வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், சிந்தலக்கரை சுப்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory