» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி நதியை தூய்மைபடுத்தும் திட்டம்: ஆட்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்

புதன் 21, ஜூலை 2021 5:34:59 PM (IST)திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி  முன்னிலையில், தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக,பல்வேறு தன்னார்வ அமைப்பினர்களுடனான கருத்துக்கேட்பு  கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஜீவ நதியான தாமிரபரணியாறு பாபநாசத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை சென்று கடலில் கலக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உட்பட அதனைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூய்மைப்படுத்தி, மீட்டெடுப்பதற்காக கடந்த காலங்களில் தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. 

அதனை மேலும் வலுபடுத்துவதற்காகவும், தாமிரபரணி தூய்மை படுத்துவதை ஒரு இயக்கமாக மாற்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக திகழ்வதற்கு நவீன மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி நீண்ட கால தொலைநோக்கு திட்டங்களை வகுத்து, செயல்படுத்துவதன் மூலம், தாமிரபரணி நதிநீரை மறு சீர்மைத்து புத்துயிர் அளித்து வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள முடியும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஒரு குடையின் கீழு; ஒருங்கிணைத்து முறையாக திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நதி சுற்றுவட்டாரப் பகுதியில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உதவி வருகிறது கடைசியாக கடலில் கலக்கிறது. 

கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியினை பலப்படுத்துதல், முட்புதர்களை அகற்றுதல், அமலச்செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவேண்டும். என மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  கேட்டுக்கொண்டார். மேலும், 60க்கும் மேற்பட்ட தன்னார்வக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பது மற்றும் தூய்மைப்படுத்துவது குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, கண்காணிப்பு பொறியாளர் நீhவள ஆதார அமைப்பு ஞானசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், துணை ஆட்சியர் பயிற்சி செல்வி மகாலெட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள், 60க்கும் மேற்பட்ட தன்னார்வக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory