» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்: பாஜக சார்பில் புதிய திட்டம் தூத்துக்குடியில் அறிமுகம்!!

புதன் 21, ஜூலை 2021 4:31:24 PM (IST)தூத்துக்குடியில் பாஜக சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்" புதிய திட்டத்தை மாநில செயலாளர் உமா ரதி தொடங்கி வைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற புதிய திட்டம் கொண்டு அறிமுகபடுத்தபட்டுள்ளது. அதன்படி பாஜகவை சார்ந்த ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அவர்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள 25 வீடுகளில் அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலமா பயன் அடைந்து இருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களில் என்ன என்ன தேவைகள் இருக்கின்றன என கண்டறிந்து அவர்களுக்கு அந்த திட்டங்களை கிடைக்க உதவி செய்ய வேண்டும். 

இதனால் பொது மக்கள் அரசு சார்ந்த பல பணிகளையும் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகிகள் மூலம் கிடைக்க பெற்று பயன் அடைவார்கள். இந்த திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் பாஜக தலைமையின் ஆணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மாநில நிர்வாகிகள் சென்று பாஜக நிர்வாகிளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். தூத்துக்குடியில் இந்த பயிற்சியை பாஜக மாநில செயலாளர் உமாரதி தொடங்கி வைத்தார். அதில் மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், கோட்ட இணை பொருப்பாளர் ராஜா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கிழக்கு மண்டல தலைவர் சந்தணக்குமார் வழிகாட்டுதலின் படியும் இன்று கிழக்கு மண்டலம் 148வது பூத் ராஜபிள்ளை சந்து பகுதியில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்வின் மூலம் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தார்கள். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல பொதுச்செயலாளர் சவுந்திரராஜன், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

PETCHIMUTHUJul 24, 2021 - 09:35:56 AM | Posted IP 162.1*****

வீடு வீடா போய் சொல்றதுக்கு நீங்க என்ன சாதனை பண்ணி வைச்சு இருக்கீங்க? எந்த முகத்தை வைச்சுக்கிட்டு மக்களை சந்திக்க போறீங்க?

நண்பன்Jul 21, 2021 - 08:14:41 PM | Posted IP 108.1*****

பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 50 ரூபாய் வந்தவுடன் வரவும்.

NanbanJul 21, 2021 - 08:10:32 PM | Posted IP 108.1*****

பெட்ரோல் விலை 50 ரூபாய் வந்தவுடன் வரவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory