» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார் அமைச்சர் கீதாஜீவன்: ஜூலை 22 முதல் 25 வரை குறைதீர்க்கும் முகாம்!

புதன் 21, ஜூலை 2021 3:10:50 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 22 முதல் 25ம் தேதி வரை மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி மூலம் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்திக்க இருக்கிறார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நேரத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காரணத்தால் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் அவா்களின் குறைகளை அறியவும் முடியவில்லை.

தற்சமயம் கரோனா தொற்று குறைந்துள்ள காரணத்தால் வருகிற ஜீலை 22 முதல் 25 ஆம் தேதி வரை தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி மூலம் பொதுமக்களை நேரில் சந்திக்க இருக்கிறார். 

அதன்படி 22.07.2021 வியாழக்கிழமை மாலை 4.00 மணி பொட்டல்காடு, 4.30 மணி முள்ளகாடு, 5.00 மணி சுந்தர்நகா், 5.30 மணி கிருஷ்ணாநகா் & பேரின்பநகா், 6.00 மணி பொன்னான்டிநகா் & வைகோதெரு, 6.30 மணி A.V.S. பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

23.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி திருமாஜிநகா், 4.30 மணி அம்மன்கோவில்தெரு, 5.00 மணி சூசைநகா், 5.30 மணி தங்கம்மாள்புரம், 6.00 மணி சண்முகபுரம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

24.07.2027 சனிக்கிழமை மாலை 4.00 மணி வீரநாயக்கன்தட்டு, 4.30 மணி முடுக்குகாடு, 5.00 மணி ஊரணி ஒத்தவீடு, 5.30 மணி காதர்மீரான்நகா், 6.00 மணி கோயில்பிள்ளைநகா், 6.30 மணி முத்துநகா் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

25.07.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி மீனவா்காலனி, 4.30 மணி தெர்மல் கேம்ப்-2, 5.00 மணி லேபா்காலனி, 5.30 மணி ஹார்பா், 6.00 மணி தெர்மல் கேம்ப்-1 ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து மனுவாக எழுதி நேரில் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து

rajkumarJul 21, 2021 - 06:06:45 PM | Posted IP 108.1*****

ENNA THAN POTTALUM ALIKIREENGALADA

rajkumarJul 21, 2021 - 06:06:13 PM | Posted IP 108.1*****

come to gomathy boy colony

rajkumarJul 21, 2021 - 06:06:07 PM | Posted IP 108.1*****

come to gomathy boy colony

rajkumarJul 21, 2021 - 06:05:35 PM | Posted IP 108.1*****

come to Gomathy boy colony

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes








Thoothukudi Business Directory