» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பாஜக கூட்டத்தில் தீர்மானம்!

செவ்வாய் 20, ஜூலை 2021 5:04:30 PM (IST)தூத்துக்குடியில் அதிமுக அரசு  கையகப்படுத்தி அடிக்கல் நாட்டிய இடத்தில் விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல் பாஜக செயற்குழு கூட்டம் ஜே எஸ் நகரில் நடைபெற்றது. மண்டல் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் சின்னதங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட  பாஜக தலைவர் பால்ராஜ், பொதுசெயலாளர் பிரபு, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

தூத்துக்குடி துறைமுக சாலையை ஒட்டி செல்லும் உப்பாற்று ஒடை கரையில் 20அடி அகலத்தில் தார்சாலை அமைக்க  வேண்டும். பைபாஸ் நான்கு வழிசாலையில் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முந்தைய அதிமுக அரசு  கையகப்படுத்தி அடிக்கல் நாட்டிய இடத்தில் விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். முத்தையாபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை சீர்படுத்தி மழைக்காலத்தில் தொற்று நோய் பரவாமல் மாவட்ட, மாநகராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

செயற்குழுஉறுப்பினர்கள் பொதுசெயலாளர்கள் தங்கப்பழம், லிங்கமாரிசெல்வம், துணைத்தலைவர்கள்செண்பகராஜ், ராஜேந்திரன், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் அரவிந்த்குமார், விவசாய அணி மண்டல் தலைவர் கணேச பெருமாள், கிராம நிர்வாக வளர்ச்சி பிரிவு மண்டல் தலைவர் தனவீரபாண்டியன் அரசு தொடர்பு பிரிவு மண்டல் தலைவர் சங்கரநாராயணன், மற்றும் கிளைதலைவர்கள் உறுப்பினர்கள் சேகர், காளிமுத்து, பெமிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory