» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 37 ரவுடிகள் கைது: எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை!

செவ்வாய் 20, ஜூலை 2021 3:48:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரவுடிகள், போக்கிரிகள் என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்படுத்தவும், ரவுடிகள் போக்கிரிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். 

அதன் பேரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதையடுத்து பல்வேறு கொலை, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான தென்பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த 1) மாரியப்பன் மகன் ராஜ்குமார் (27), வடபாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி தாமோதரநகரைச் சேர்ந்த 2) இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (20) மற்றும் கணபதி நகரைச் சேர்ந்த 3) குமார் மகன் ராஜ்குமார், தெர்மல் நகர் காவல் நிலையத்தில் தாமோதரநகரைச் சேர்ந்த 4) ஆறுமுகம் மகன் முருகன் (49), முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சூசைநகரைச் சேர்ந்த 5) கனகராஜ் மகன் சந்தனராஜ் (45) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 6) தென்பழனி மகன் ஆல்பர்ட் (19), கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த 7) பவுன்ராஜ் மகன் வீரமணிகண்டன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10.06.2021 அன்று மார்ட்டின் என்பவரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட  தைக்கா தெருவை சேர்ந்தவர்களான 1) அலியப்பா மகன் பாபுசுல்தான் (52), 2) பீர்கான் மகன் புகாரி (எ) புகாரி சதாம் ஹ_சைன் (29), 3) ஜிந்தா மகன் ரஸ்ரூதீன் (எ) முகம்மது வஜ்ரூதீன் (29), 4) பாபு சுல்தான் மகன் பாரீஸ் (எ) முகம்மது பாரீஸ் அலியப்பா (25), 5) அஹமது மகன் சிந்தா (எ) சிந்தா மர்சூக் (27), கடந்த 15.06.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முனியசாமி மகன் சங்கர் (42) என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தெர்மல் நகர் பகுதியை சேர்ந்த 6) முத்துராஜ் மகன் மூர்த்தி (20), 

கடந்த 07.06.2021 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணபதிசமுத்திரம் பகுதியை சேர்ந்த வடிவேலன் மகன் ராஜேஷ் கண்ணன் (21) என்பவரை வழிமறித்து தாக்கி செல்போன்களை கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட பழையகாயல் பகுதியை சேர்ந்த 7) கருப்பசாமி மகன் சிவபெருமாள் (எ) சிவா (25), கடந்த 15.06.2021 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபுத்தனேரி வடக்கு தெருவை சேர்ந்த சுடலை மகன் மாரியப்பன் (50) என்பவரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட கீழபுத்தனேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 8) மூக்கையா (எ) சண்முகநாதன் மகன் முருகபெருமாள் (30) மற்றும் கீழபுத்தனேரி தெற்கு தெருவை சேர்ந்த 9) மாரியப்பன் மகன் பாலமுருகன் (21), கடந்த 18.06.2021 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா நகர் பகுதியை சேர்ந்த பொய்யாமொழி மகன் ரவி (எ) பொன்பாண்டி என்பவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் கட்டாம்புளி பகுதியை சேர்ந்த 10) ஜெயக்குமார் மகன் ஜெரீன் (23) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 11) கண்ணன் மகன் அலெக்ஸ் என்ற அலெக்ஸ் பாண்டியன் (29) ஆகிய 11 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

இது தவிர தென்பாகம் காவல் நிலையத்தில் 3 ரவுடிகள், வடபாகம் காவல் நிலையத்தில் 4, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 5, எட்டயாபுரம் காவல் நிலையத்தில் 1, ஏரல் காவல் நிலையத்தில் 1, மெஞ்ஞானபுரம் காவல் நியைலத்தில் 1, நாசரேத் காவல் நிலையத்தில் 2, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2 என மொத்தம் 19 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கூலிப்படையினர், ரவுடித்தனம் செய்பவர்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory