» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண்டல தேர்தல் மோதல்... 2பேருக்கு வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 20, ஜூலை 2021 3:17:27 PM (IST)தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் விவகாரத்தில் 2பேரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் மூவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் ஆகஸ்டு 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சபை பிரதிநிதிகள் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இரண்டாவது கட்டமாக ஆகஸ்டு 28 ஆம் தேதி சேகர மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சேகர செயலாளர், பொருளாளர் மற்றும் சபைமன்ற பிரதி நிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மூன்றாவது கட்டமாக செப்டம்பர் 18ஆம் தேதி சபை மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் பலரது வாக்குரிமைகள் வேண்டுமென்றே பறிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சபை மக்களுக்கும் பாதிரியார்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் திருமண்டல தேர்தல் விவகாரத்தில் 2பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் எஸ்டிஆர் பொன்சீலன் அணி - செல்லப்பாண்டியன் அணி என இரு பிரிவினர் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், எஸ்டிஆர் பொன்சீலன் ஆதரவாளர்களான தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த ஜூஜித் (46), ஜெபராஜ் (45) ஆகியோர் நேற்று அங்குள்ள பெட்ரோல் பல்கிற்கு சென்றபோது 3 மர்ம நபர்கள் அவர்களை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிந்து வசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் திருமண்டல தேர்தல் மோதல் சம்பவங்களால் சபை மக்களிடைேய அச்சம் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

மணிமேகலாJul 21, 2021 - 12:05:41 PM | Posted IP 108.1*****

திருச்சபையில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பது விசுவாசிகளின் கடமை. கடந்த 8 வருடங்களாக நடந்த திருமண்டல நிர்வாக சீர்கேடுகளை கர்த்தர் அறிவார்.கர்த்தருடைய பிள்ளைகளாக எதற்கும் அஞ்சாமல் முன்னேறி செல்வோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory