» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மைதானத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிர்ப்பு : இந்து முன்னனி கண்டன ஆர்பாட்டம்!

திங்கள் 19, ஜூலை 2021 3:16:57 PM (IST)தூத்துக்குடியில் பள்ளி மைதானத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட முயல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடியில் பள்ளி மைதானத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னனி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் எஸ்.இசக்கி முத்துக்குமார் தலைமையில், ராஜவேல் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: 

தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் டிடிடிஏ பள்ளிக்கு பாத்தியப்பட்ட  விளையாட்டு மைதானமாக உபயோகித்து வரும் அரசு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவ தேவலயம் அமைக்க 2015 முதல் முயற்சி செய்து வருகிறது.  இது தொடர்பாக தூத்துக்குடி தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேவாலயம் அமைக்கும் முயற்சியை கைவிடுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. 

ஆனால் தற்போது தூத்துக்குடி தாசில்தாரும் அவர்களுடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். அதன் விளைவாக மைதானத்தில் தேவாலயம் கட்டும் பணி இரவில் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி ஆட்சியரிடம் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி தாசில்தார் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

ஆர்பாட்டத்தில் மேற்கு மண்டல பொது செயலாளர் கே. சுடலை, துணை செயலாளர் எ.சுடலைமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.ஆர்.சரவணக் குமார், இந்து ஆட்டோ முன்னனி மாவட்ட பொருப்பாளர் ஜி. மாரியப்பன், நாராயணராஜ் மாவட்ட அமைப்பாளர், மாதவன் மாவட்ட பொது செயலாளர், நிர்வாகிகள் சுடலை செல்வம் ராஜவேல், முனியசாமி, தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் தலைவர் எஸ். ஈஸ்வரன், ஆறுமுகம் மாநகர பேச்சாளர், பாஜக வழக்கறிஞர் நாகராஜ், மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கல்நது கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிதத்னர். 


மக்கள் கருத்து

kumarJul 20, 2021 - 12:35:19 PM | Posted IP 108.1*****

arasu vilayattu maythanam amaika kudutha idathil...church kattvathu sattathirku purambanathu...arasu ithai udanadiyaga thadukka vendum.

ஆன்டி இந்தியன்Jul 19, 2021 - 08:50:36 PM | Posted IP 162.1*****

மோடியும் கிறிஸ்தவ நாட்டு அமெரிக்க டிரம்ப் அதிபர் நண்பர் தானே சங்கிகளுக்கு எப்படி புரிய வைக்க ??

சரவணகுமார்Jul 19, 2021 - 07:59:30 PM | Posted IP 108.1*****

கிறிஸ்தவ மதமே வெளிநாட்டு இருந்து இங்கு நம்மை அடிமையாக நடத்திய வெளிநாட்டுக்காரர்கள் சதிச்செயல் தான் இங்கு எப்பொழுதும் பிரிவினை வாதத்தையும் பிரச்சனைகளையும் உண்டு செய்வதற்காக விட்டுச்சென்ற மதமே கிறிஸ்துவ மதம் அந்தக் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நல்லது செய்வது போல் நடித்து அப்போதுள்ள அரசு இந்த இடத்தை பள்ளி கட்டுவதற்கு கொடுத்த இடத்தை சர்ச் கட்டுவது என்பது மிகவும் கேவலமாக விஷயமாகும் அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு செய்த காரணத்தால் மட்டுமே இந்து முன்னணி போன்ற நல்ல இயக்கம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயல்கிறது நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய வாழ்க

இசைக்கு முத்துக்குமார்Jul 19, 2021 - 05:37:02 PM | Posted IP 162.1*****

கல்வி நடத்தும் டி டி டி ஏ என்ற பெயரில் நடத்திவந்த கிறிஸ்தவ மதபோதகர்கள் அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்து குழந்தைகள் அந்த ஊரில் படிக்கும் குழந்தைகளை மதமாற்ற வெளிநாட்டு இடம் பணம் பெற துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை இந்து முன்னணி அந்த ஊர் மக்களை திரட்டி உங்களுடைய முகத்திரையை கொண்டு வருவோம் பத்திரகாளி உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் எங்க மூலமாக இன்று வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள்

ராமநாதபூபதிJul 19, 2021 - 04:57:56 PM | Posted IP 162.1*****

இந்து முன்னணி ஜெயக்குமார் என்றாவது விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை குறித்து போராட்டம் நடத்தி இருப்பாரா? இவர்களது வேலையே பிறரை நோண்டிக்கொண்டே இருப்பது தான். இதே போல கிறிஸ்தவர்களும் பதிலுக்கு உங்களது விவகாரத்தில் தலையிட ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? உங்களது வேலையை மட்டும் பார்க்கவும்.

முத்துJul 19, 2021 - 04:12:15 PM | Posted IP 108.1*****

மடத்தூர் மக்களின் சமத்துவத்தை சகோதரத்துவத்தை கெடுக்கும் இப்படி பட்ட விஷமிகளுக்கு அம்மா பத்திரகாளி அம்மாள் தகுந்த தண்டனை வழங்குவாள்.... அவர்கள் இடத்தில் அவர்கள் ஆலயம் கட்டுகிறார்கள்... இதை தடை செய்தால் அம்பாள் தண்டிபாள்...ஆலயம் கட்டபட வேண்டும்... மடத்தூர் மக்கள் துணை நிற்போம்..

ANISH RAJJul 19, 2021 - 03:57:05 PM | Posted IP 173.2*****

அந்த இடம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலதிற்கு பாத்தியப்பட்ட இடம்.. மேலும் இந்த இடத்தில் தூய பிரசன்ன ஆலயம் 168 ஆண்டுகளாக செயல் பட்டு வந்தது..இதில் இந்து முன்னணியினர் உண்மைக்கு புரம்பாக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.... கனம் மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்கள் இதின் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கமாறு கேட்டு கொள்கிறேன்...

GsksJul 19, 2021 - 03:53:24 PM | Posted IP 162.1*****

சட்டம் அவர்கள் கையில் இருப்பதால் தாங்கள் செய்வது சரி என்று சொல்கின்றனர் இந்து முன்னணியினர் மற்றும் மடத்தூர் ஐ சேர்ந்த சில முன் முன் விரோதிகள் தேவாலயத்தை கேட்ட விடாமல் தடை செய்கின்றனர் எனவே இதற்காக அரசாங்கத்தையும் தங்கள் கையில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு தகுந்த நடவடிக்கையை அரசாங்கம் அல்லது நல்ல உள்ளம் கொண்டவர்கள் இதை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் நாங்கள் பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்றாட செய்கிறோம் அது கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளி எனவே இதற்கு சரியான ஒரு தீர்வை கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் இப்படிக்கு, ஊர் மக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory