» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொரோனா கொடுமையிலும் மக்களிடம் அபராதம் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு எதிர்ப்பு !

திங்கள் 19, ஜூலை 2021 11:01:57 AM (IST)

தூத்துக்குடியில் ஏழை, எளிய மக்களின் வீடுகளில் மின் மோட்டார்களை பறிமுதல் செய்வது போல் பெரிய வணிக வளாகங்கள்,ஹோட்டல்களிலும் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காேரிக்கைகள் எழுந்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சமூகஆர்வலர் சிவராமன் என்பவர் கூறுகையில், "தூத்துக்குடியில் சமீபகாலமாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  உத்தரவின் பெயரில் குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதற்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிகிறது. ஏற்கனவே கொரோனா காலத்தில் வேலையின்மை, வருமான இழப்பு ஆகியவற்றில் சிக்கி தவித்து அச்சத்தில் உள்ள பொது மக்கள் இதனால் மேலும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

மேலும் மாற்றுத்திறனாளிகள், வயது முதியோர்கள் அறுவை சிகிச்சை செய்தவர்களால் குடிநீர் அடிபம்பில் குடிநீர் அடித்து எடுக்க இயலாதவர்களாக உள்ளனர். அவர்களது வீட்டிலுள்ள மோட்டாரை பறிமுதல் செய்தால் அவர்களால் குடிநீர் அடிபம்பில் குடிநீர் அடித்து எடுக்க இயலாது. மேலும் வீடுகளில் 2 அல்லது 3 நாட்களுக்கான குடிநீரையே மக்கள் சேமித்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்து வணிக வளாகங்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தால் மாநகராட்சிக்கு வரக்கூடிய வருமானம் அதிகமாகும். தூத்துக்குடியில் பல பெரிய வணிக வளாகங்கள், ஹோட்டல்கள்,நீச்சல்குளங்கள் ஆகியவற்றில் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. அதை முதலில் மாநகராட்சி அதிகாரிகள் தடுக்க வேண்டும். அதன் பின்னர் வீடுகளில் மின் மோட்டார் பறிமுதல் செய்யலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள், வயது முதியோர்கள் அறுவை சிகிச்சை செய்தவர்கள் நலன் கருதி அவர்களுக்கு சிரமமின்றி குடிநீர் கிடைக்க மாநகராட்சியினர் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

உண்மைJul 19, 2021 - 08:57:23 PM | Posted IP 162.1*****

மாநகராட்சிக்கு காசு பத்தலேயாம், சாக்கடைக்கு நிறைய செலவு பண்ணுவாங்களாம்

M.sundaramJul 19, 2021 - 02:12:32 PM | Posted IP 108.1*****

When I went to pay the water charges for the second term (Apr to Jun) the counter clk in West Zone said come in Aug 21. Such delay should be avoided. They are collecting a flat rate of Rs 500. Then the amount should ben accepted instantly. water consuming as per Meter reading system should be implemented.

ராஜாJul 19, 2021 - 12:41:37 PM | Posted IP 162.1*****

GOOD News

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory