» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் : ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்!

வியாழன் 15, ஜூலை 2021 12:01:06 PM (IST)தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கலந்துகொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்முன்னிலையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, பெங்களுர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்திட ரூ.40 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இங்கு மீன்களை வைத்து பாதுகாத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில் கோல்டு ஸ்டோரேஜ் கட்டப்பட உள்ளது. தற்போது புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணித்து மீனவர்கள் மற்றும் இங்கும் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகுகள் சங்க தலைவர் சேவியர்வாஸ், வட்டக்காரர் சங்க தலைவர் பிரவின், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் வயலா, விஜயராகவன், மீன்துறை ஆய்வாளர் பொன்சரவணன் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள், பல்வேறு மீனவர் சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 16, 2021 - 11:11:36 AM | Posted IP 108.1*****

கடல் இருந்தும் மீனுக்கு திண்டாடும் நிலை தூத்துக்குடி மக்களுக்கு. இது என்னவிதமான அரசியல் என்றே புரியவில்லை

தமிழ் செல்வன் அவர்களுக்குJul 16, 2021 - 10:06:47 AM | Posted IP 162.1*****

மீனவர்கள் காசுக்காக பெரிய பெரிய சுத்தமான மீன்களை காசுக்காக கார்பொரேட் கம்பனிக்கு (SEA FOODS) விற்று விடுகிறார்கள், மக்களுக்கு கெட்டுப்போன அழுகி போன மீன்கள் கிடைக்கிறதே.. அழுகிப்போன பதப்படுத்தி வைத்த மீன்களை தங்க விலை மாதிரி விலை ஏத்தி விற்க்குறாங்க... போங்க.

truthJul 16, 2021 - 08:08:39 AM | Posted IP 162.1*****

You are wrong. Our fishermen community depends on their livelihood from fishing. The fishery resource is already depleting. if you let every one to go and do fishing, then the resource will collapse and the fishermen community will suffer a lot. WE should ban investment from outside the fishing community on big fishing vessels. These big trawlers are destroying and looting the fish resources. Sustainable fishing is lost in India, because of overexploitation by outsiders/outside investment.

VinothJul 15, 2021 - 08:25:47 PM | Posted IP 173.2*****

Mr.Tamil Selvan do not comment blindly. Go and ask some fishermen and you will be surprised that the number of different cast people involved in fishing in fishing harbour. It is my personal experience.

தமிழ்ச்செல்வன்Jul 15, 2021 - 12:55:08 PM | Posted IP 108.1*****

எங்களைத் தவிர வேறு எந்த சாதிக்காரனும் தூத்துக்குடியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்ற சாதி ஆணவப் போக்கே இந்த புறக்காவல் நிலையம் உருவாக காரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory