» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் குமரி, உவரிக்கு புதிய வழித்தட பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைத்தார்!

சனி 10, ஜூலை 2021 3:16:59 PM (IST)திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர்  அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 5 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பெரியதாழை பேருந்து நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு நகர பேருந்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் திருச்செந்தூர் பகுதியை பல்வேறு மேம்பாடு அடைந்து சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து இன்று பேருந்து போக்குவரத்தில் புதிய வழித்தடங்களும் துவக்கி வைக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி, தாண்டவன்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, குட்டம் வழியாக உவரிக்கு ஒரு பேருந்து வசதியும், திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி, மணிநகர், தட்டார்மடம், திசையன்விளை வள்ளியூர் வழியாக நாகர்கோயிலுக்கு 2 பேருந்துகளும், திருச்செந்தூரில் இருந்து குலசை, உடன்குடி, பெரியதாழை, உவரி, கூடங்குளம், அஞ்சுகிராம் வழியாக கன்னியாகுமரிக்கு 2 பேருந்துகளும் புதிய வழித்தடத்தில் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.

மேலும், பெரியதாழை மக்களின் கோரிக்கையை ஏற்று பெரியதாழையில் இருந்து அழகப்பபுரம், படுக்கப்பத்து, அழகம்மாள்புரம், தாண்டிபுரி, சுண்டன்கோட்டை, தங்கையூர் வழியாக உடன்குடிக்கு பெண்கள் இலவசமாக செல்லும் வகையில் நகரப்பேருந்தும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்வரன், பொது மேலாளர் சரவணன், துணை மேலாளர்கள் சசிகுமார், கோபாலகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் எஸ்.ஜெ.ஜெகன், ராமஜெயம், எ.பி.ரமேஸ், வால்சுடலை, மாரியப்பன், ஜெயக்குமார், தினகர், முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory