» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.30 கோடி மதிப்புள்ள மஞ்சள் சிக்கியது:3பேர் கைது

புதன் 7, ஜூலை 2021 4:21:30 PM (IST)

குளத்தூரிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.1.30 கோடி மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

2020ம் ஆண்டு மார்ச் சில் உலகெங்கும் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து இலங்கையில் மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களின் விலை விண்ணுக்கு எகிறியுள்ளது. இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் தற்போது ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் அதிகளவில் கடத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்குள் 10க்கும் மேற்பட்ட மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

தூத்துக்குடி கடற்பகுதியில் கடலோர காவல் படை, மரைன் போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசாரின் கண்காணிப்பு அதிகம் இருப்பதால் இலங்கைக்கு மஞ்சள் கடத்துவது தடுக்கப்படுகிறது. இதனால் புரோக்கர்களும், கடத்தல் பேர் வழிகளும் தங்கள் கடத்தல் இடத்தை குளத்தூர் கடற்பகுதிக்கு மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 130 மணி அளவில் குளத் தூர் போலீஸ் சரகத்திற் குட்பட்ட கீழ வைப்பார் கடற்பகுதியிலிருந்து இலங் கைக்கு மஞ்சள் கடத் தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, எஸ்ஐக்கள் ஜீவமணி, வில்லியம் பெஞ்சமின், ஏட்டு இரு தயகுமார் ஆகியோர் கீழ வைப்பார் கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பைக்குக ளில் வந்த 3 பேர் கடற்கரையின் மறைவான பகுதிக்கு சென்றனர். இதையடுத்து கியூ பிரிவு போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். மறைவிடத்தில் அவர்கள் 3 பேரும் இலங்கைக்கு கடத்துவதற்காக தலா 30 கிலோ எடை கொண்ட 87 மஞ்சள் மூடைகளை படகுகளில் ஏற்றுவதற்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதன் இலங்கை மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரமாகும்.

விசாரணையில் அவர்கள் குளத்தூர், சிப்பிகுளம் நடுத்தெருவைச் சேர்ந்த ராபர்ட் மகன் வினித் (21), கீழ வைப்பார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் ராபிஸ்டன் (31), அதே ஊர் வடக்கு தெருவைச் சேர்ந்த ஹென்றி மகன் ஸ்ரீலாஸ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து 87 மஞ்சள் மூடைகள், 3 செல்போன்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த மஞ்சள் மூடைகள் அனைத்தும் கீழ வைப்பாரைச் சேர்ந்த இருதயவாஸ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி, குளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory