» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் - குமரி புதிய நான்கு வழிச்சாலை பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

செவ்வாய் 6, ஜூலை 2021 3:20:06 PM (IST)திருச்செந்தூர் - கன்னியாகுமரி நான்குவழி புதிய தேசிய நெடுஞ்சாலை NH32 அமைக்கப்பட உள்ள வழித்தடங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர், கன்னியாகுமரி நான்கு வழி புதிய தேசிய நெடுஞ்சாலை NH32 அமைக்கப்பட உள்ள வழித்தடங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (06.07.2021) மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், நாகப்பட்டிணம் முதல் கன்னியாகுமரி வரை திருச்செந்தூர் வழியாக புதிய நெடுஞ்சாலை NH32 அமைக்கப்பட உள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும் போது 58 கிமீ வரை பயண தொலைவு மற்றும் நேரம் குறைவாகும். ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் இரு வழிசாலை உள்ளது. அதனை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் வழித்தடங்கள் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சிறப்பு வருவாய் அலுவலர் (ISRO) செல்வராஜ்,திட்ட இயக்குநர், தேசிய நெடுஞ்சாலை தூத்துக்குடி சங்கர், தூத்துக்குடி விமான நிலைய உதவி பொது மேலாளர் (ELECTRICAL) கே.ஜி.பிஜூ, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, செயற்பொறியாளர் தாமிரபரணி வடிநிலக் கோட்டம் (திருநெல்வேலி) அண்ணாதுரை, செயற்பொறியாளர் திருவைகுண்டம் வடிநிலக் கோட்டம் பண்டாரம், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பழனிவேலாயுதம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory