» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தருவைக்குளத்தில் மகளிர் மேம்பாடுக்கான சுயதொழில் பயிற்சி

செவ்வாய் 22, ஜூன் 2021 5:33:49 PM (IST)தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கிராமப்புற மகளிரை மேம்படுத்தும் இரண்டு வார ஆரி கலைப் பயிற்சி தருவைக்குளத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி லூசியா ரோஸ் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இப்பயிற்சியில் தருவைக்குளத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். துவக்க விழாவில் தூய மரியன்னைக் கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், கணிதத்துறை உதவி பேராசிரியை பிரிசில்லா பசிபிகா மற்றும் தருவைக்குளம் முன்னாள் பங்குதந்தை எட்வர்ட் மற்றும் தருவைக்குளம் பங்கு தந்தை வின்சென்ட், ராஜாத்தி, ஜெயமேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பயிற்சியின்போது வடிவமைக்கப்பட்ட ஆடைகள் காட்சி படுத்தப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கரோனா பரவலின் இரண்டாம் அலையை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உன்னத் பாரத் அபியானின் பெரணியல் அசிஸ்டெண்ட் பண்ட்டோடு இணைந்து வழங்கிய இந்த திட்டத்தில் எம் கல்லூரியின் மாணவிகள் மற்றும் தருவைக்குள ஊர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த பயிற்சி மேலும் ஒரு வாரம் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory