» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் - கனிமொழி எம்பி பேட்டி!

செவ்வாய் 22, ஜூன் 2021 3:21:40 PM (IST)தேர்தலின் போது மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கறுதிகள் ஒவ்வென்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி  வருவதாக கனிமொழி எம்.பி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் மூடுக்குமீண்டான் பட்டியில் உள்ள ஆக்டிவ் மைன்ட்ஸ் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து, அங்கிருந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டதும், தேர்தலின்போது மக்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். இது அனைவரும் அறிந்து விஷயம். ஆளுநர் உரையில் எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட, அதை செய்து கொண்டிருப்பதைப் பாராட்ட வேண்டும். இந்து அறநிலையத்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதை மட்டுமே, அரசு நேரடியாக தலையிட்டு செய்ய முடியும். மற்ற இடங்களில் பிரச்சினைகள் இருந்தால் நிச்சயமாக அதனையும் சரி செய்ய அரசு முன் வரும் என்றார்.

இலங்கை அகதிகள் முகாமில்..... 

பின்னர், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்.பி. தனது சொந்த நிதியில் இருந்து, முகாமில் உள்ள 382 குடும்பங்களுக்கு கரோனா கால நிவாரணமாக 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார். பின்னர் முகாமைச் சுற்றி ஆய்வு செய்தார். அங்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நடைபெறும் ரேஷன் கடை கட்டுமான பணிகளை பார்வையிட்டா. தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். மருத்துவம், வேளாண் படிப்புகளில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர். தொடர்ந்து, எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் உள்ள முகாமில் உள்ள 38 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டன.  மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory