» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி அளிக்க கூடாது : ஆட்சியரிடம் கோரிக்கை!!

திங்கள் 21, ஜூன் 2021 12:38:43 PM (IST)



தூத்துக்குடியில்  தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆம் ஆத்மி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வி.குணசீலன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தாத்துக்குடி அருகேயுள்ள அல்லிக்குளம், தெற்கு சிலுக்கன்பட்டி, பேரூரணி, இராமசாமிபுரம், மேல தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை ஆகிய 7 ஊர்களிலும் உள்ள நிலங்களை சிப்காட் நிறுவனத்தின் மூலம் சுமார் 2.200 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. 

இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் விவசாய தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு பெரிய அளவிலான மானாவாரி புஞ்சை நிலங்கள் தான் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. மேலும் எங்கள் ஊருக்கு அருகில் ஒடும் உப்பாற்று ஓடை, கொம்பாடி ஓடை, குறிஞ்சான் ஓடை மற்றும் பல பெயரில்லாத பட்டா நிலங்கள் வழியாக ஓடும் நல்ல தண்ணீர் ஓடைகள் பல கிளைகளாக பிரிந்து புதுக்கோட்டை பைபாஸ் பாலம் அருகே உப்பாற்று ஓடையாக கோரம்பள்ளம் குளம், பெட்டை குளம், அத்திமரப்பட்டி, குளம், நம்பிக்கை மீண்டான் குளம் வழியாக கோரம்பள்ளம் நீர்த்தேக்கத்திற்கு சென்று சேருகிறது. 

அதை நம்பி சுற்றுவட்டாரங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் இந்த கோரம்பள்ளம் நீர்த் தேக்கத்திலிருந்து தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து தூத்துக்குடி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கிவருகின்றது. உபரிநீர் திருச்செந்தூர் ரோடு வழியாக துறைமுகம் அருகே கடலில் சென்று கலக்கின்றது. தற்போது அமையவிருக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த உப்பாற்று ஓடையின் இருபுறமும் சுமார் 5 கி.மீ நீளத்தில் அமைய இருப்பதாக தெரிகிறது. 

இவ்வாறு இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் இந்த தொழிற்சாலையின் அனைத்து கழிவுகளும் உப்பாற்று ஓடையில் கலந்து எங்களுடைய குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். மேலும் கடல் வளம் அழியும். மேலும் விவசாயம் முழுவதுமாக அழிக்கப்படும். இந்த இடத்தில் தொழிற்சாலை அமையப்பெற்றால்  மழைநீர் உபரிநீர் தொழிற்சாலையால் மறிக்கப்பட்டு வழிமாறி ஊர்களுக்குள் புகுந்து தூத்துக்குடி மாநகரத்திற்குள்ளும் பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, தூத்துக்குடி சுற்று வட்டார சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த தெழிற்சாலை இடத்தில் அமையவிருப்பதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory