» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பேருந்து சேவைக்கு அனுமதியில்லை : பொதுமக்கள் ஏமாற்றம்!!

திங்கள் 21, ஜூன் 2021 10:18:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க தளர்வுகளில் பேருந்து சேவைக்கு அரசு அனுமதி அளிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த மாதம் 10ம் தேதி பேருந்து சேவை, ரயில் சேவை உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டது. பாதிப்பு படிப்படியாக குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன. பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் நிபுணர்கள் குழு மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாமென நிபுணர்கள் குழு பரிந்துரைத்தது. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, பாதிப்பு வாரியாக மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தனித்தனியாக தளர்வுகளை வழங்கியது. மூன்றாம் வகையில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது.தூத்துக்குடி மாவட்டம் 2வது வகையில் உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகினர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுய தொழில் செய்வோர், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட தொடங்கி விட்டதால் பேருந்துகள் இயங்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மக்கள் பணி நிமித்தமாக தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவையை பயன்படுத்தி வந்தனர். தற்போது பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்படாததால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். குறைந்தபட்சம் 50 சதவீதம பணிகளுடன் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளள்னர். 


மக்கள் கருத்து

TUTYJun 21, 2021 - 09:24:13 PM | Posted IP 162.1*****

YES

TUTYJun 21, 2021 - 09:24:12 PM | Posted IP 162.1*****

YES

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory