» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை : அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.

சனி 19, ஜூன் 2021 9:25:21 PM (IST)தூத்துக்குடியில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸவரர் திருக்கோயில் கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (19.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000/- கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கியது போல் இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு உதவித்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்க வேண்டும் என இந்து சமய நலத்துறையின் அமைச்சர் அவர்களின் மூலம் கோரிக்கை வைத்தோம். அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு உதவித்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கினார்கள். 

இன்றைய தினம் நமது தூத்துக்குடி வட்டத்தில் 14 பயனாளிகள், கோவில்பட்டி வட்டத்தில் 39 பயனாளிகள், எட்டையாபுரம் வட்டத்தில் 28 பயனாளிகள், விளாத்திக்குளம் வட்டத்தில் 25 பயனாளிகள் என மொத்தம் 106 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4000/-, அரிசி 10 கிலோ, 15 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் திருக்கோயில்களில் இசைப்பள்ளி அமைத்து பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்கள். 

அதனடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர்களுக்கு கொரோனா நிவராண உதவித்தொகை வழங்கி உள்ளார்கள். அதுபோல், கொரோனா நோய் தொற்றால் தந்தை, தாயை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.3 இலட்சம் வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் திட்டத்தினை அறிவிப்பது மட்டுமல்லாமல் திட்டம் முறைப்படி தகுதியானவர்களுக்கு செல்கிறதா என கண்காணிக்கவும் செய்கிறார்கள். இதுபோல் பல திட்டங்களை வகுத்து தேவையான உதவிகள் பொது மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் (பொ) செல்வவிநாயகம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் (பொ) அன்புமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி.ரோஜாலி சுமதா, முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன், கோட்டு ராஜா, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் பணியாளர் சங்கத்தலைவர் செல்வ பட்டர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory