» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்வளப் பல்கலைக்கழக நிறுவன தின போட்டிகள்

சனி 19, ஜூன் 2021 4:23:54 PM (IST)

டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன நாளை முன்னிட்டு மீன்வளம் மற்றும் கோவிட்-19 வினாடி-வினா போட்டி இணையதள வாயிலாக நடைபெற்றது

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இன்று மீன்வளம் மற்றும் கோவிட்-19 வினாடி வினா போட்டி இணையதள வாயிலாக காலை 10.00மணி முதல் பிற்பகல் 12.30 வரை நடத்தப்பட்டது. மாணவர் மன்றம் துணைத்தலைவர், சா.ஆதித்தன், போட்டியை நடத்தினார். இதில் சித்தார்த் மற்றும் புகழேந்தி அணியினர் முதலாமிடத்தை பிடித்தனர். நிறைவு விழாவில் விஷால் இலக்கிய மன்ற செயலாளர் அனைவரையும் வரவேற்றார். 

முன்னதாக கோவிட்-19 இரண்டாவது அலையில் தினந்தோறும் எவ்வாறு பணிகளை செலவழிப்பது என்பது குறித்து கட்டுரைப் போட்டியும், 2019 (எதிர்மறை நபர்களை தவிர்த்தல்) / 2020 (நேர்மறை நபர்களை தவிர்த்தல்) / 2021 (மக்களை தவிர்த்தல்) என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. கவிதைப் போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிவற்றில் முதலாம் இடத்தை பிடித்த ஸ்ரீஹரி மற்றும் செல்வி காவ்யா ஆகியோர் கவிதையில் வாசித்தனர். 

கோவிட்-19 இரண்டாவது அலையைப்பற்றி இறுதியாண்டு மாணவர் நந்தகோபால், மாணவி காவ்யா ஆகியோர் கவிதையில் வாசித்தார். இறுதியாண்டு மாணவி அபர்ணா நான்குவருட கல்வி பயணத்தை பகிர்ந்து கொண்டார். மாணவர் மன்ற தலைவர் ந.வ.சுஜாத்குமார் இறுதியுரை ஆற்றினார். இறுதியாக மாணவர் மன்ற பொதுச்செயலாளர் ராபர்ட் நன்றியுரை வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory