» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புதிய ஆணையர் சாருஸ்ரீ பொறுப்பேற்பு: மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் முக்கியத்துவம் அளிக்க உறுதி!!

சனி 19, ஜூன் 2021 10:25:05 AM (IST)



தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணி கரோனா தடுப்புப் பணி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மழை வருவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.  

மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  2015ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ்  அதிகாரியாக தேர்வானவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராக பணியாற்றிய அவர் தொடர்ந்து சென்னை வணிகவரித் துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இணை ஆணையராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகராட்சி 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதிய மாநகராட்சி ஆணையருக்கு மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மகனி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வித்யா, உதவி ஆணையர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory