» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் தவணையை கேட்டு நெருக்கடி தரக்கூடாது: நிதி நிறுவன மேலாளர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தல்!

திங்கள் 7, ஜூன் 2021 8:10:49 PM (IST)



கரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது மக்களிடம் கடன் தவணையினை  வற்புறுத்தி செலுத்துமாறு நெருக்கடி தரக்கூடாது  என தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் கூட்டத்தில் ஆட்சியர் செந்தில் ராஜ், வேண்டுகோள் விடுத்தார். 

கரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த 24.05.2021 முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசரதேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம் மேற்படி கடன் மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி, சில நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் புகார் வரப்பெற்றது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்; தலைமையில் 07.06.2021-ல் அனைத்து மண்டல வங்கியாளர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும்; தனியார் நிதி நிறுவனங்களின் மேலாளர்களுக்கு கூட்டம் நடைபெற்றது. 

கோவிட் காலத்தில் பொது மக்கள் தொழில் செய்வோர் மற்றும் சுயஉதவி குழுவினர் தவணை தொகையை திருப்பி செலுத்துவதில் சிரமம் உள்ளதால், அவர்களை வற்புறுத்தி தொகையினை செலுத்த அறிவுறுத்தப்படவில்லை என வங்கியாளர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மேலாளர்களும் வழக்கமாக பொது மக்கள்/சுயஉதவிக்குழுக்கள் கடன் தவணை தொகையினை தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் பழக்கத்தினை கடைப்பிடித்து வருகின்றனர் எனவும், கொரனோ நோய் பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தவணை தொகை செலுத்த முடியாதவர்களை வற்புறுத்தி தவணை தொகை செலுத்திட வேண்டும் என நெருக்கடி தரவில்லை என சம்மந்தப்பட்ட நுண்நிதி நிறுவனங்கள் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடனுக்கான தவணை தொகையினை திரும்ப செலுத்த அறிவுறுத்தும் கடின போக்கினை தவிர்த்திட வேண்டும் எனவும் எவ்வித புகார்களுக்கும் இடம்அளிக்காத வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

ஏழைJun 7, 2021 - 09:16:31 PM | Posted IP 162.1*****

அரசுக்கு கோரிக்கை ஏற்று 3 மாதங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory