» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் சிக்கிய இளைஞர்களுக்கு ஆட்சியர் உதவி - பொதுமக்கள் பாராட்டு!!

வியாழன் 8, ஏப்ரல் 2021 8:05:44 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 2 இளைஞர்களுக்கு ஆட்சியர் மனித நேயத்துடன் உதவினார்.

தூத்துக்குடியில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில்,  சத்யா நகர் பாலம் அருகே மோட்டார் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள், எதிர்பாராத விதமாக பைக் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சம்பவத்தை கண்டு உடனடியாக காயம் அடைந்த 2 பேரையும் தனது காரிலேயே ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். 

மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் மனித நேயத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.  மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காயம் அடைந்தவர்கள் முக்காணியை சேர்ந்த சிவசக்தி மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காயமடைந்த 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து

ராஜாராம்Apr 8, 2021 - 09:23:19 PM | Posted IP 162.1*****

மனிதநேய பண்பாளருக்கு வாழ்த்துக்கள்.

இரா.சரவண சுந்தரவேல்Apr 8, 2021 - 08:38:35 PM | Posted IP 108.1*****

மனமார்ந்த நன்றி collector.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thalir Products


Thoothukudi Business Directory