» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2வது அலை? ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று உறுதி

புதன் 7, ஏப்ரல் 2021 9:58:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக  43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 721 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 16 ஆயிரத்து 381 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா பாதிப்பால் மொத்தம் 143 பேர் இறந்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,11,110-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,821-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,70,546 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 27,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir Products
Thoothukudi Business Directory