» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சவேரியார் ஆலயத்தில் இரட்டை கோபுரம் திறப்பு விழா

புதன் 7, ஏப்ரல் 2021 9:56:09 PM (IST)தூத்துக்குடி புனித சவேரியார் ஆலயத்தில் இரட்டை கோபுரம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி அருகே உள்ள டி.சவேரியார் புரத்தில் புனித சவேரியார் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் புதிதாக இரட்டை கோபுரம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோபுரத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்  ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி, இரட்டை கோபுரங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் மற்றும் அசன விழா நடந்தன. விழாவில் பங்கு தந்தையர்கள் ஜேசு நசரேன், ஸ்டாலின், ஜஸ்டின், கிங்ஸ்டன், வினித் ராஜா  மற்றும் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாகிகள், இறைமக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir ProductsNalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory