» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல் : ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

புதன் 7, ஏப்ரல் 2021 5:01:13 PM (IST)



தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறைக்கு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. 

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 2,097 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்ததும் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் வைக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையெடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து பெறப்பட்டு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள தூத்துக்குடி அரசு வஉசி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. 

அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வந்த பின்னர் 6 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் 6 அறைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஜுஜவரப்பு பாலாஜி, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் அறைக்கு சீல் வைத்தார். இதுபோல் ஒவ்வொரு தொகுதியின் அறைக்கும் சீல் வைக்கப்பட்டது.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் துணை இராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest Cakes





Thoothukudi Business Directory