» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மருத்துவமனையிலிருந்து கனிமொழி எம்பி டிஸ்சார்ஜ்!!

புதன் 7, ஏப்ரல் 2021 4:14:34 PM (IST)

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதலில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

பின்னா், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். அடுத்த 5 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்பு கவச உடை அணிந்து நேற்று மாலை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கனிமொழி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Thalir Products

Nalam PasumaiyagamThoothukudi Business Directory