» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது : தூத்துக்குடியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
புதன் 7, ஏப்ரல் 2021 12:22:41 PM (IST)
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவரும், அக்கட்சியின் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. இதுபோன்ற தோ்தலை நான் சந்தித்தது கிடையாது.
இது அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஒன்று இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பிடித்துக் கொடுத்தால் கூட அவா்களை விட்டு விட்டு பிடித்து கொடுப்பவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்கிறது. வாக்குரிமை சுதந்திரம் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க கூடாது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதன் 21, ஏப்ரல் 2021 8:26:05 AM (IST)

ARASAMUTHUApr 7, 2021 - 01:00:45 PM | Posted IP 162.1*****