» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் - காவல்துறை அறிவுரை
புதன் 7, ஏப்ரல் 2021 10:22:10 AM (IST)

முதலூரில் பிஎஸ்என்எல் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த ஜெபராஜிக்கு டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் மற்றும் போலீசார் அறிவுரை கூறினர்.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகன் ஜெபராஜ் (28). இவருக்கு திருமணமாகி மனைவி ஜெபா, மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கூலிதொழிலாளியான ஜெபராஜ் அடிக்கடி மது அருந்தி வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனைவிக்கு அவருக்கு குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் ஜெபராஜ், வாக்காளர் அடையாள அட்டையை காட்டி ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் மனைவி ஜெபா, அருகில் உள்ள உறவினர் ஒருவரிடம் கூறியதன் பேரில் அவரது வாக்காளர் அட்டையை வாங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஜெபராஜ் வீட்டில் தன்னை யாரும் மதிக்கவில்லை என கூறி, அவர்களை யாரும் கண்டிக்க முன் வரவில்லையென கூறி முதலூர் -சுப்பிரமணியபுரம் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள செல்லிடபேசி கோபுரத்தில் 150 அடி உயர பகுதியில் ஏறி சென்று தான் தற்கொலை செய்ய போவதாக அறிவித்துள்ளார். இதனை பார்த்த முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன், தட்டார்மடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் போலீசார் வந்து ஜெயராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். மேலும் தகவலின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சத்தியராஜ், மசபியேல் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஜெபராஜ் நண்பர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். ஜெபராஜ் மேலிருந்து தனக்கு குடும்பத்தில் யாரும் மரியாதை தர மறுக்கிறார்கள் என தெரிவித்து அவர் செல்லிடபேசி, செருப்பு ஆகியவற்றை கிழே வீசினார். இச்சம்பவத்தை அறிந்து கிராம மக்கள் பலர் கூடினர். தொடர்ந்து அவரது மனைவி ஜெபா, தாயார் ஜெபசெல்வி ஆகியோரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு ஜெபராஜ் சமாதானமாகி செல்லிடபேசி கோபுரத்தில் இருந்து கிழே இறங்கினார். பின்னர் ஜெபராஜிக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் வாலிபர் கைது
புதன் 21, ஏப்ரல் 2021 10:46:59 AM (IST)

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

KIRUBAApr 7, 2021 - 04:58:11 PM | Posted IP 162.1*****