» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவரை பிரிந்த மனவேதனையில் பேராசிரியை தற்கொலை

புதன் 7, ஏப்ரல் 2021 8:35:37 AM (IST)

கோவில்பட்டியில் கணவரை பிரிந்த மனவேதனையில் போராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்..

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சொா்ணலதா (33). இவா் தனியாா் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தாா். இவருக்கும் மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த யோகீஸ்வரனுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி கடந்த 4 வருடங்களாக பிரிந்து வசித்து வந்தனராம்.

இந்நிலையில் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள சகோதரா் வீட்டுக்கு வந்திருந்த சொா்ணலதா, கணவருடன் சோ்ந்து வாழ முடியாமல் போனது குறித்து மன வேதனையில் இருந்தாராம். நேற்று முன்தினம் இரவில் தூங்குவதற்காக மாடி அறைக்கு சென்ற அவா், நேற்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். பூட்டியிருந்த அறை கதவை உடைத்து பாா்த்தபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory