» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 69.84 சதவீதம் வாக்கு பதிவு

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 10:31:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. 6 தொகுதிகளில் சராசரியாக 69.84 சதவீதம் வாக்குகள் பதிவானது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 6 தொகுதிகளில் அரசியல் கட்சியினர் உள்பட 120 பேர் போட்டியிட்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் வாக்காளர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 

ஆனால், வாக்குப்பதிவு வேகம் அதிகமாக இருந்தது.தேர்தல் எதிரொலியாக  பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தால் சாலைகள் வெறிச்சோடியும் காணப்பட்டன. கரோனா தடுப்பு விதிகள் காரணமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குச்சாவடி பகுதியில் முககவசம் அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. 

மாலை 6 மணிக்கு பிறகு இரவு 7 மணி வரை கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் வாக்களித்தனர். இரவு 7 மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்காக நின்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 6 தொகுதிகளில் சராசரியாக 69.84 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிக பட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 76.43 சதவீதம் வாக்குகள் பதிவானது. குறைந்த பட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 65.04 சதவீதம் வாக்குகள் பதிவானது. 

213 - விளாத்திகுளம் தொகுதியில் 76.43 சதவீதம் 

214 - தூத்துக்குடி தொகுதியில் 65.04 சதவீதம் 

215 - திருச்செந்தூர் தொகுதியில் 69.96 சதவீதம் 

216 - ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 72.34 சதவீதம்

217 - ஓட்டப்பிடாரம் தொகுதியில்  69.82 சதவீதம் 

218 - கோவில்பட்டி  தொகுதியில்  67.84 சதவீதம் வாக்குப்பதிவை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடி முன்பு துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Thalir Products


Black Forest Cakes

Thoothukudi Business Directory