» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குச்சாவடி அருகே அதிமுக கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு!!

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 5:44:10 PM (IST)தூத்துக்குடியில் வாக்குச் சாவடி அருகே அதிமுக கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார். தூத்துக்குடி பாளை ரோட்டில், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பள்ளி வளாகத்தில் இவருக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் ஆதரவாளர்களும், அமைப்புச் செயலாளர் சித செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களும் பூத் ஏஜென்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இன்று மாலை 4.30 மணியளவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

அப்போது அங்கு நிறுத்தியிருந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் அருண் ஜெபக்குமார் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிமுக கோஷ்டி மோதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Thalir ProductsBlack Forest Cakes
Thoothukudi Business Directory