» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக பிரமுகரின் பைக் எரிப்பு : எஸ்பி விசாரணை - கோவில்பட்டியில் பரபரப்பு!!
செவ்வாய் 6, ஏப்ரல் 2021 4:00:19 PM (IST)

கோவில்பட்டியில் அதிமுக பிரமுகரின் மோட்டார் பைக்கிற்கு மர்ம நபர்கள் தீவைத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி சுந்தரி, அதிமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர். இந்நிலையில், ஆரோக்கியராஜின் மோட்டார் பைக்கிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர்.
அமமுக கட்சியினர் ஸ்கூட்டருக்கு தீவைத்ததாக ஆரோக்கியராஜ் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதன் 21, ஏப்ரல் 2021 8:26:05 AM (IST)
