» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக - அதிமுக மோதலால் வாக்குப்பதிவு நிறுத்தம் : தூத்துக்குடி, கடம்பூரில் பரபரப்பு

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 11:45:17 AM (IST)

தூத்துக்குடி, கடம்பூரில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கடம்பூர் அருகே அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று 8.50 மணியளவில் திமுகவினர் சிலர் வயதான பெண்மணியை தூக்கி வந்துள்ளனர். இதற்கு அதிமுக ஏஜெண்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக - திமுகவினர் இடையே வாக்குச்சாவடிக்குள் தகராறு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு காலை 9 மணி முதல் 9.30 மணிவரை அரை மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் 9.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

தூத்துக்குடியில் 

தூத்துக்குடி டூவிபுரத்தில் டிஎன்டிஏ பள்ளியில் உள்ள 234வது வாக்குச் சாவடியில், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்க வந்தனர். அப்போது சிலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அதிமுகவினர் அதிகாரிகள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுததப்பட்டது. இதற்கு திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டவுண் டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்ததை நடத்தினர். இதையடுத்து வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir ProductsNalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory