» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 180 பேர் வேட்புமனு தாக்கல்
வெள்ளி 19, மார்ச் 2021 9:02:29 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 180 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாககல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று ஒரே நாளில் 85 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி தொகுதியில் இன்று 15பேர் மனுத்தாக்கல் செய்தனா். இதுவரை 30 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
கோவில்பட்டி தொகுதியில் இன்று 21பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 38பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
விளாத்திகுளம் தொகுதியில் இன்று 7பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 23பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
திருச்செந்தூர் தொகுதியில் இன்று 20பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 32பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று 7பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 26 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில்இன்று 15பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 31பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் 85 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 180 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதன் 21, ஏப்ரல் 2021 8:26:05 AM (IST)
