» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 9, மார்ச் 2021 3:16:53 PM (IST)

தூத்துக்குடியில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.. 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராம்குமார் (42). ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் இவர் கடந்த 16.07.2009 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில், ஓட்டபிடாரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கற்பழித்துள்ளார். பின்பு அப்பெண்னை திருமணம் செய்து கொண்டு அவரை ஏமாற்றி விட்டு சென்றுவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அப்போதைய மத்தியபாகம் காவல் ஆய்வாளர் வீமராஜ் வழக்குப்பதிவு செய்து எதிரி ராம்குமார் என்பவரை கைது செய்து அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் இன்று (09.03.2021) குற்றவாளி ராம்குமாருக்கு 10 வருடம் சிறைதண்டனையும், 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்ட அப்போதைய மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வீமராஜ், அரசு வழக்கறிஞர் சுபாஷிணி, மத்தியபாகம் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர் பத்மபிரியா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir Products




Thoothukudi Business Directory