» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திங்கள் 8, மார்ச் 2021 5:45:51 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்,  தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று (08.03.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்,  தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்;ற தேர்தலையொட்டி 2,097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான 113 அலுவலர்களுக்கு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. 

ஒவ்வொரு வாக்குசாவடியிலும்; வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, காற்றோட்ட வசதி, மின்சார வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேம்ப் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து நீங்கள் செய்துள்ள ஆய்வுகள் குறித்து அறிக்கையின்படி பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். இப்பணிகள் மிகவும் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நமது மாவட்டத்தில் ஏற்கனவே 1,603 வாக்குசாவடிகள் தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு காரணமாக பிரிக்கப்பட்டு தற்போது 2,097 வாக்குசாவடிகள் உள்ளது. எனவே இப்பணியில் மிகுந்த கவனத்துடன் சிறப்பாக செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, தேர்தல் வட்டாட்சியர் ரகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thalir Products

Nalam Pasumaiyagam


Black Forest Cakes




Thoothukudi Business Directory