» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காவல்துறை அலுவலகத்தில் மகளிர் தின விழா

திங்கள் 8, மார்ச் 2021 5:33:38 PM (IST)தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து மகளிர் காவல் துறையினர்களுக்கும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப் பணியாளர்களில் அலுவலக கண்காணிப்பாளர் மாரியம்மாள் தலைமையில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியார்கள் என 22 பெண் அமைச்சுப்பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றிலிருந்து காவல் ஆய்வாளர் தேவி, ஜெரால்டின் வினு ஆகியோர் தலைமையில் 15 பெண் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மேற்படி மகளிர் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களும் அனைத்து வகையான செல்வங்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products

Black Forest CakesThoothukudi Business Directory