» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரத்த தான முகாம்: அனிதா ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்

திங்கள் 8, மார்ச் 2021 5:04:00 PM (IST)காயல்பட்டினத்தில் ரத்த தானம் செய்தவர்களுக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர்  அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சான்றிதழ் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், "நடப்பது என்ன?" சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில் குருதிக்கொடை முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 63 பேர் கலந்து கொண்டு குருதிக்கொடை செய்தனர்.

திருச்செந்தூர் எம்எல்ஏவும், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் இம்முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குருதிக்கொடை அளித்தோருக்கு சான்றிதழ் வழங்கினார். நகர செயலாளர் முத்து முஹம்மத், கேஎம்டீ மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் கிஷார், அதன் செயலாளர் செய்யித், நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எஸ். செய்யித் முஹம்மத் ஆகியோர் இதன்போது உடன் இருந்தனர்.

முகாம் ஏற்பாடுகளை, மெகா அமைப்பின் செயலாளர் எம்.எஸ். முஹம்மத் சாலிஹ், நிர்வாகிகளான எம்.ஏ. புகாரீ, ஏ.எஸ். புகாரீ, பீ.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், எம்.எம். முஜாஹித் அலீ, தமிழன் முத்து இஸ்மாயில், எம்.எல். ஹாரூன் ரஷீத், எஸ். அப்துல் வாஹித் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam PasumaiyagamThalir Products


Thoothukudi Business Directory