» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி: அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது

திங்கள் 8, மார்ச் 2021 4:22:06 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ்,  தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சட்டமன்ற தேர்தல் 2021 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி (Random) அடிப்படையில ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று (08.03.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 2,097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கிட்டங்கியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் முதல்கட்டமாக அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சுழற்சி (Random) அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாகவும், விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதம் கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள எடுத்து செல்லப்பட்டு பேலட் சீட் பொருத்தும் பணிகள் முடிந்தவுடன்; வாக்குசாவடிக்கான சுழற்சி அடிப்படையில் ரேண்டம் செய்யப்பட்டு அந்தந்த வாக்குசாவடிக்கு அனுப்பப்பட உள்ளது. இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் பட்டியல் வழங்கப்படும். வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துசெல்வதை அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலவலர் கண்ணபிரான், இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் / மின்னனு வாக்குப்பதிவு இயந்திர ஒருங்கிணைப்பு அலுவலர் செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), அக்னல், ரவி, (தி.மு.க.), முத்துமணி (காங்கிரஸ்), வரதராஜ் (என்சிபி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory