» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி

திங்கள் 8, மார்ச் 2021 4:11:02 PM (IST)ஓட்டப்பிடாரத்தில்  வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி விளையாட்டுக் கழகம் 33ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி  மாணவ-மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.  வ.உ.சி விளையாட்டுக் கழக தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். துணை தலைவர்  யோகராஜ், ஆலோசகரும், தமிழாசிரியருமான முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

மாணவர்களுக்கு 10 கி.மீ, மாணவிகளுக்கு 5 கி.மீ, சிறுவர், சிறுமிகளுக்கு 3 கி.மீ துõரமும் இலக்காக நிர்ண யிக்கப்பட்டது. மாணவர்களுக்கான 10 கி.மீ போட்டியை கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் துவக்கி வத்தார்.  இதில், முதல் 3 இடங்களையும் ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்  பார்வதி நாதன், பொன் இசக்கி, முத்து இசக்கி ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு சிலோன் காலனி டிடிபிஎஸ் காண்ட்ராக்டர் தில்லைநாயகம், கீழகூட்டுப்பண்ணை அதிமுக பிரமுகர் சீனிராஜ்,  ராஜாவின்கோவில் பஞ்., தலைவர் அன்புராஜ் ஆகியோர் பரிசு வழங்கினர்.

மாணவிகளுக்கான போட்டியை புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் துவக்கி வைத்தார். இதில்,  முதல் மற்றும் 3ம் இடத்தை புதூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கோகிலா, சங்கீதா  ஆகியோரும், 2வது இடத்தை காட்டு நாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி ஜெயபிரதாவும்  பிடித்தனர். அவர்களுக்கு ஓட்டப்பிடாரம் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் பெரியமோகன், ஓட்டப் பிடாரம் வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் எல்கே முருகன், பரிவில்லிக்கோட்டை பஞ்.,  செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

சிறுவர், சிறுமிகளுக்கான 3 கி.மீ போட்டியயை தூத்துக்குடி மாவட்ட தடகள சங்க செயலாளர் பழனிச்சாமி  துவக்கி வைத்தார். இதில், மாணவர்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச்  சேர்ந்த மாணவர்கள் சக்திவேல், முருகேஸ்வரன், வெற்றிவேல் ஆகியோர் முதல் 3 இடங்களைப்  பிடித்தனர். சிறுமிகள் பிரிவில்,  காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிந யா, புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த லட்சுமிபிரியா, கீழஈரால்  ஆக்ஸ்லியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹர்சினி சுவேதா ஆகியோர் முதல் 3 இடங்களைப்  பெற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.

விழாவில், வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி, தூத்துக்குடி மாவட்ட நாட்டு  நலப்பணித்திட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கள்ளாண்ட பெருமாள், சில்லாங்குளம் முத்துக்கருப்பன்  மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாரிமுத்து, முத்துராஜ், வ.உ.சி விளையாட்டுக் கழக  செயற்குழு தலைவர் சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வ.உ.சி விளையாட்டுக் கழக இணை செயலாளர்கள் புகழும்பெருமாள்,  வேல்முருகன், கால்பந்து அணி தலைவர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir ProductsNalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory